PARFamily

PARFamily

Thursday, November 14, 2019

Tours&travel

குஜராத் - ராஜஸ்தான்  Maharana Pratap museum, Haldighat. ஹல்திகாடி என்னும் இடத்தில் உள்ள இந்த மஹாராணா பிரதாப் அருங்காட்சியகம் ஒரு தனியார் அருங்காட்சியகம் ஆகும். சரித்திர புகழ் பெற்ற மஹாராணா பிரதாப் அவரது வாழ்க்கை வரலாறு, மற்றும் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக ‘பலிச்சா’ கிராமத்தை சேர்ந்த திரு. மோகன் ஶ்ரீமாலி என்பவர் இந்த அருங்காட்சியகத்தை கட்டும் உன்னத பணியை மேற்கொண்டார். பல்வந்த் சிங் மேதா என்னும் சுதந்திர போராட்ட வீரரின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவோடு இந்த திட்டத்தை அவர் மேற்கொண்டார். இதற்காக ஶ்ரீமாலி அவர்கள் தனது அரசாங்க பணியை ராஜினாமா செய்தது மட்டுமன்றி தனது பெற்றோர் வழிவந்த பண்ணை நிலம், பெரிய வீடு இவற்றையும் விற்றார். மேலும் தனது கனவு திட்டத்தை நிறைவேற்ற 2 கோடி ரூபாய் கடனும் வாங்கினார். 12 வருட காலத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு 2003ம் வருடம் ஜனவரி மாதம் 19ம் நாள் இந்த அருங்காட்சியகம் அப்போதைய ராஜஸ்தான் ஆளுநர் திரு. அனுஷ்மான் சிங் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. நிர்வாகத்தினரால் இலவசமாக நியமிக்கப்பட்டுள்ள வழிகாட்டியின் 5 நிமிட முன்னுரை, அதனைத்தொடர்ந்து ஒரு சிறிய திரையரங்கத்தில் 5 நிமிட படக்காட்சி, பின் சுற்றி வரும் பாதையில் காணொலி காட்சி என மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மஹாராணா பிரதாப் 1540 ம் ஆண்டு மே மாதம் 9 ம் தேதி மேவாரின் ராணா உதய்சிங் அவரது மூத்த மகனாக கும்பல்கரில் பிறந்தார். 1572ல் அரியணை ஏறிய இவர் 1576ல் ஹல்திகாட் ல் நடைபெற்ற போரில் அக்பரின் பெரும் படையை மிகுந்த வீரத்துடனும் தைரியத்துடனும் எதிர்த்து நின்றார். இந்த போரில் அரச குதிரை சேதக் மஹாராணாவின் உயிரை காக்க தன்னுயிரை ஈந்தது. பின்பு முகலாயர்களுடன் போரிட மஹாராணா பிரதாப் கொரில்லா முறை தாக்குதலை கையிலெடுத்து 1585ல் சாவந்த்- ஐ தலைநகராக்கி ஆட்சி செய்தார். 1597 ஜனவரி 19ல் மஹாராணா பிரதாப் காலமானார். இந்த அருங்காட்சியகத்தில் மேவார் அரச குடும்பத்தின் முத்திரை, பன்னாதாயின் தியாகம், மஹாராணா அவரது திட்டங்களை விளக்குதல், காட்டில் அவர்வாழ்ந்த காட்சிகள், சேதக் குதிரையுடனான பிணைப்பு, ராணா புல்லில் செய்யப்பட்ட ரொட்டியை உண்பது, காடியா லோகார் இனமக்கள் நாடோடி போல் இருத்தல், சித்தோடின் காட்சிகள் மற்றும் ராணாவின் வாழ்க்கையின் மற்ற சம்பவங்கள் முதலியவை அழகான மாதிரி பொம்மைகளாகவும், படங்களாகவும், காட்சிகளாகவும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒலி, ஒளி அமைப்பில் பின்னணி இசையோடு மின்சாரத்தில் இயக்கப்படும் இந்த மாதிரிகள் மிக உயிரோட்டமாக உள்ளன. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் மேவார் அரச குடும்பத்தினரின் சித்திரங்கள், மீராபாயின் சித்திரம், பழங்கால கலாச்சாரத்துடன் தொடர்புடைய விவசாய உபகரணங்கள், இசைக்கருவிகள், ஆடைகள், பாத்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இங்கு ஒரு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. ஹல்திகாட் என்னும் இந்த இடம் சரித்திர தனித்துவம் வாய்ந்த ஒரு குறுகிய மலைப்பாதையாகும். இது ஆரவல்லி மலைத்தொடரில் ரக்த தலாய்க்கு அருகில் அமைந்துள்ளது. பாலி மற்றும் ராஜசமந்த் மாவட்டங்களை இணைக்கும் இந்த இடம் உதய்ப்பூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஹல்தி என்பது மஞ்சளையும் காடி என்பது பள்ளத்தாக்கையும் குறிக்கும். மஞ்சள் பள்ளத்தாக்கு போல அமைந்திருப்பதால் இந்த பெயர் இந்த பகுதிக்கு வழங்கப்பட் டது. முகலாயர்கள் ஹல்திகாட் ல் இருந்து மேவார் அரசை தாக்க வந்தபோது மேவார் படை, யுத்தம் ஒரு திறந்த வெளியில் நடைபெற விரும்பி முகலாய படையை திறந்த வெளிக்கு வரவைத்தது. பின்னர்நடந்த போரில் அந்த களம் முழுவதும் இரத்தத்தால் நிறைந்து ஒரு இரத்தகுளம் போல் காட்சி அளித்ததால் அந்த இடம் ரக்த தலாய் என்ற பெயர் பெற்றது. இந்த போரில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை. இந்த போருக்கு பிறகு மஹாராணா பிரதாப் தன் குடும்பத்துடனும், படையுடனும் வாழ்க்கையை காட்டிலேயே கழித்தார். பல நாட்களுக்கு புல்லால் செய்த ரொட்டியை உண்டார். அவரது வாழ்க்கை முழுவதும் முகலாய அரசர் அக்பருடன் போர் செய்வதிலேயே கழிந்தது. மேவார் வீரம், தியாகம் , சரித்திரம் பேசும் பூமியாகும். பலரது வீரமும், தியாகமும் நினைவு கூறப்பட வேண்டும். ஹல்திகாட் போரில் மஹாராணா பிரதாப் பலத்த காயமுற்று நினைவிழந்து வீழ்ந்த போது, அவரது குதிரை சேதக் ராணாவைசுமந்து கொண்டு நீரோடையைக் கடந்து ஒரு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்தது. ஆனால் சேதக் அப்போது அதனுடைய ஒரு காலில் மிக பலத்த காயத்தோடு இருந்ததால் அது ராணாவை காப்பாற்றிய போதிலும் தன் உயிரை இழந்தது. இந்த சமயத்தில் மானாஜலோ என்ற படைவீரன் ராணா களத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்க ராணாவைப்போல் ஆடையணிந்து போர்களத்தில் வலம்வந்தான். ஆயினும் அன்றே களத்தில் உயிர் நீத்தான். மஹாராணா சேதக்-ன் வீரத்தையும், விசுவாசத்தையும் போற்றி அது இறந்த இடத்திலேயே அதன் நினைவாக சேதக் நினைவிடத்தை அமைத்தார். முழுவதும் வெள்ளை சலவைக் கற்களால் ஆன சேதக் நினைவிடம் ஹல்திகாட் அருங்காட்சியகத்திலிருந்து 2கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஹல்திகாட்-ல்நடைபெற்ற இந்த போரில் ராணா சேதக் குதிரையின் மீதிருந்து போர் செய்தார். ஆனால் ராஜா மான்சிங் யானையின் மீதிருந்து போர் செய்தார். எனவே சேதக்-கிற்கு ஒரு செயற்கை தும்பிக்கை பொருத்தப்பட்டு அது ஒரு குட்டி யானை போல காண்பிக்கப்பட்டது. மேவாரின் சரித்திரம் வீரம் மற்றும் தியாகத்தின் உண்மையான பொருளை உணர்த்தும் பல பெண்களை பற்றியும் பேசுகிறது. அதில் பன்னா தாய்-ன் சரித்திரமும் ஒன்று. பன்னா என்பது மரகதத்தையும் தாய் என்பது ஆயா என்பதையும் குறிக்கும். 16 ம் நூற்றாண்டில் ராணி கர்ணாவதியின் பணிப்பெண்ணாக இருந்த பன்னா தாய் - யிடம் உதய்சிங்-ll இளவரசரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவள் தனது சொந்த மகன் சந்தன்உடன் இளவரசரையும் பாலூட்டி வளர்த்து வந்தாள். இளவரசர் உதய்சிங்ஐ அவரது மாமா பன்வீர் கொல்ல வந்த போது பன்னாதாய் தன் நாட்டின் நலனுக்காக தன் சொந்த மகனுக்கு இளவரசன் போல் உடை அணிவித்து உதய்சிங்ஐ காப்பாற்றினாள். அவளது மகன் சந்தன் கண்ணெதிரே வாளால் வெட்டப்பட்டபோதுகூட சிறிதும் மனம் கலங்காமல் செய்த தியாகம் என்றும் போற்றுதலுக்குரியது. இந்த காட்சியெல்லாம் காணொலி காட்சியில் பார்க்கும் போது மனம் கனத்து கண்ணீர் வருவது நிஜம். இந்த அருங்காட்சியகம் திருமதி பிரதிபா பட்டில், திரு மன்மோகன்சிங், மற்றும் பல்மாநில முதல்வர்கள், பல ஆளுநர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்ற பெரியவர்களால் பார்க்கப்பட்டு பாராட்டும் பெற்றுள்ளது. இந்த வளாகத்திற்குள் அருகிலுள்ள பலிச்சா கிராமத்தை சேர்ந்த மக்களின் கைவினைப் பொருட்களும், மற்றும் நயமான புல்பந்து, ரோஸ் ஷர்பத் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் அந்த மக்களுக்காக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. உதய்ப்பூர் செல்லும் போது இந்த அருங்காட்சியகத்தை பார்க்க தவறாதீர்கள். Maharana Pratap museum is a private museum. In order to showcase the life and achievements of legend Maharana Pratap, one Shri.Mohan Shrimali who belongs to Balicha village took up a stupendous task of building a museum with the guidance and support of great freedom fighter Balwant Singh Mehta. He resigned his job, sold his parental farm land and pucca house and also took a loan of Rs 2 crores to complete his dream project of 12 years. On 19th Jan 2003 this museum was inaugurated by the erstwhile governor of Rajasthan Sri. Anshuman Singh. On entering the museum you will have a five minute speech by a guide appointed by the management free of charge, 5 minutes film show in a small theater followed by a walk through with light and sound shows. Maharana Pratap was born on 9th May 1540 at Kumbhalgarh. He was the eldest son morning Maharana Udaisingh. Enthroned in 1572 he stood against Moghul emperor Akbar at Rakta Talai , Haldighati with great valor and courage. Chetak the royal charger saved Maharana life and breathed it’s last in this battle. Maharana resorted to Guerilla warfare against Moguls and established his capital at Chawand in 1585 AD. Maharana passed away on 19th Jan 1597 at Chawand. The museum displays in the form of attractive models, pictures, tableau of royal emblem of Mewar, the sacrifice of Panna Dhai, Maharana discussing his strategies, scene of Pratap’s life in jungle, his union with his horse Chetak, eating bread made of grass, the vow taken by Gadia Lohars motto live in houses, scenes of Chittorgarh and other events related to Prstap’s life.The model operated by electricity becomes lively by accompanying the music , light and sound effects. In the museum are displayed portraits of Meerabai, Maharanas of Mewar dynasty, objects that are associated with agricultural implements, musical instruments, dresses, utensils. There is also a library. Haldighati is a unique historical mountain pass amidst the Aravali range. Haldighati derives it’s name from the term Haldi means turmeric and Ghati means valley. It links the Pali and Rajsamand district in Rajasthan. It is 40 Km away from Udaipur citynear Rakt Talai. The Mogul army marched from Haldighati to attack Mewar Kingdom. The Mewar army wanted to have the battle in open field, hence they made the Mogul army to move to an open area, which was later filled with blood and was named Rakt Talai( lake of blood) It is said none of them won the battle in Haldighati and Maharana Pratap had to live in forest with his army and family and had to consume grass chapathis for several days. Also his entire life he fought against Mogul emperor Akbar. There was a point of time when Maharana Pratap was seriously injured and 2 heroes came to rescue. Mana Jhala who dressed up like Maharana Pratap to give the illusion of Rana present in the field. But Mana Jhala lost his life on the same day. The other hero was Rana’s loyal horse Chetak. Chetak fled from the battle ground with his unconscious master on his back. Though Chetak himself was injured in the battle and suffered deep wounds in one of his legs , in order to take his master to a safe place he crossed a water stream with injured leg that led to his sorrowful demise. Maharana built Chetak memorial on the same location where it passed away to salute the courageousness and loyalty of his dear Chetak. The Chetak memorial built in pure white marble is at a distance of 2 km from Haldighati museum. Mewar is a land of bravery, sacrifice and great history. It speaks about many women who described the meaning of courage and sacrifice. One among them is Panna Dhai. She was a 16th century nurse maid of Rani Karnavathi.Panna means Emerald and Dhai means nurse. She was given charge of Udaisingh-II breastfeeding him virtually from his birth in 1522along with her son Chandran. When Udaisingh was attacked by his uncle Bhanvir Panna Dhai sacrificed her own son’s life for the sake of Mewar’s future. She never broke down, not even when her son was slaughtered with the sword before her. The museum has been visited by many big personalities such as Smt. Pratibha Patil, Dr.Manmohan Singh, several chief ministers, governors, Chief Justice and highly praised by them. A few shops are also show cased inside the premises for the Balicha village people having handicrafts, Pure Gulkand, Gulab Sharbat at a nominal price. Please do have a visit to this museum when you go for a trip to Udaipur.

No comments:

Post a Comment